×

பூந்தமல்லி அருகே கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் நவபாஷாண ராஜமுருகன் சித்தர் பீடம் கோயிலில் புதிதாக பாதரச கைலாசநாதர் சுவாமி மற்றும் அம்மச்சார் அம்மன் கோயில்கள் அமைக்கப்பட்டு, அங்கு புதிய சுதை வேலைப்பாடுகள், வர்ணம் தீட்டுதல், தோரணம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் கோ பூஜை, கஜ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோம பூஜைகளுடன் பாதரச கைலாசநாதர் மற்றும் அம்மச்சார் அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வந்தன.

நேற்று பாதரச கைலாசநாதர் மற்றும் அம்மச்சார் அம்மன் கோயில்களில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, அதன் மூலவர் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாதரச கைலாசநாதர், அம்மச்சார் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பூந்தமல்லி அருகே கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Poontamalli ,Kailasanathar ,Swami ,Navabhashana Rajamurugan Siddhar Peedam temple ,North Malayambakkam ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு மசூதியில் தங்குமிடம், உணவு