×

மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பேட்டி

மதுரை: ரயில் தீ விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் நிரப்பி உள்ளனர். கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்குபதிவு உள்ளிட்ட விவகாரங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் தீ விபத்து தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். லக்னோவில் இருந்தும் சிலரை அழைத்து விசாரிக்க வேண்டி உள்ளது. விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி கூறியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர். இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதுரையில் கடந்த 26ம் தேதி சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 8 பேரின் அடையாளம் தெரிந்தது. ஒருவரின் அடையாளம் காண இயலவில்லை. பயணி ஒருவர் ஸ்டவ்வைப் பற்ற வைத்து டீ தயாரிக்க, தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தீயைக் கண்ட வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, உள்ளே இருந்த பயணிகள் அவசர கதியில் தீயை அணைக்காமலேயே கீழே இறங்கியுள்ளனர். இதனால், அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதில் ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகினர்.

ரயில்பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் விபத்து நேரிட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான குழுவும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் நிரப்பி உள்ளனர். கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்குபதிவு உள்ளிட்ட விவகாரங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.

 

The post மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madurai rail fire ,Railway Safety Commission ,Madurai ,Nagarkovil ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது