×

கலவை அருகே திமிரி வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க செங்கல்பட்டு சிறுமணி நெல் நடவு பணி

*வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு

கலவை : கலவை அருகே திமிரி வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகம் நடவு செய்யும் பணியை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தனர். அரசு விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான இயற்கை நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செங்கல்பட்டு சிறுமணி, தூயமல்லி உள்ளிட்ட விதை நெல் ரகம் 50 சதவீத மானியத்தில் கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று குப்பிடிசாத்தம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகம் இயற்கை விவசாய நடவு பணி நடைபெற்றது. இப்பணிகளை திமிரி வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் திவ்யா, ராதிகா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில் வேளாண்மை துறையினர், விவசாயிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post கலவை அருகே திமிரி வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க செங்கல்பட்டு சிறுமணி நெல் நடவு பணி appeared first on Dinakaran.

Tags : Thimiri region ,Thimiri ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!