×

சென்னை போரூரில் அமெரிக்காவைச் சேர்ந்த யு.பி.எஸ்.நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை போரூரில் அமெரிக்காவைச் சேர்ந்த யு.பி.எஸ். நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புகளுடன் துறைசார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம் என முதல்வர் கூறினார். தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிக்கான அனுமதி கடிதங்களை முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.08.2023) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள UPS (United Parcel Service) நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் 400-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை (Technology Centre) திறந்து வைத்தார். மேலும், முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அம்மையத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி (Internship) பெறுவதற்கு அனுமதி கடிதங்களையும் வழங்கினார்.

அகில இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், பெரும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை அளவிலான இளைஞர்களுக்கு உருவாக்கி முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக அவர்களின் எண்ணிக்கையிலான வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

வணிக நடைமுறைச்சட்டம் விதிகளில் பெருமளவிலான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு அனுமதிகள் பெறுவதை இலகுவாக்கியதன் விளைவாக, ஒன்றிய அரசு வெளியிட்டுவரும் தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில், 14-ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு, வெகுவாக முன்னேறி தற்போது 3-ஆம் இடத்தை பெற்றுள்ளது. மேலும், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு துறைவாரியான தொழில் பூங்காக்கள் வசதிகள் கொண்ட அமைக்கப்பட்டுள்ளதுடன், முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிப்பதற்கு, துறைவாரியாக கொள்கைகளையும் வெளியிட்டுள்ளது.

(Sector Specific Policies) தமிழ்நாடு அரசு 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கினை எய்துவதற்காக, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியதன் விளைவாக, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை, 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,97,196 கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளின் அடுத்த கட்டமாக, 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மேற்கொண்டு வருகின்றது.

* யுனைடெட் பார்சல் சர்வீசஸ் நிறுவனம் (M/s United Parcel Service – UPS)

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த UPS நிறுவனம், சரக்குப் போக்குவரத்து / தளவாடங்களை (Logistics) 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொண்டுசெல்வதன் மூலம் 5 இலட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் உலகளாவிய முன்னணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், உலகளவில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது,தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச்செல்வதில் தொடர்ந்து முதலீடு செய்து, இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் உள்ள RMZ Paramount வளாகத்தில் இந்நிறுவனம் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை (UPS Technology Centre) முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அம்மையத்தில் பயிற்சி பெறுவதற்கான கடிதங்களையும் வழங்கினார்.

தொழிற்சாலை பொறியியல், மென்பொருள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளைச் சேர்ந்த 400 உயர் தொழில்நுட்ப வல்லுநர்களை, குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு, திறன்பயிற்சி அளித்து பணியமர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்ப மையத்தை அமைப்பதற்கு இந்தியாவில் பல நகரங்கள் பரிசீலிக்கப்பட்டதில், அமெரிக்காவில் உள்ள தங்களது தலைமையகம் போன்றே நேர்த்தியான ஒரு இடம் என உணர்ந்ததால் சென்னையை தேர்ந்தெடுத்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான மையங்களும், உலகளாவிய திறன் மையங்களும் (Global Capability Centres – GCCs) அதிக அளவில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ளன. உலக அளவில் தமிழ்நாட்டின் போட்டித்தன்மையை வெகுவாக அதிகரிக்க இவை பெரிதும் உதவும்.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, UPS நிறுவனத்தின் உலகளாவிய தலைமை டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அலுவலர் பால சுப்ரமணியன், தலைமை மனித வள அலுவலர் டேரல் ஃபோர்டு, இந்தியாவிற்கான துணைத் தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன், சென்னை தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் பி. ஸ்ரீராம், கேரியர் டெவலப்மண்ட் மையத்தின் முதல்வர் டாக்டர் பாலமுரளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை போரூரில் அமெரிக்காவைச் சேர்ந்த யு.பி.எஸ்.நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : US ,U.N. ,Borur, Chennai ,GP S. ,CM. ,G.K. Stalin ,Chennai ,Borur GP S. ,Principal ,Dinakaran ,
× RELATED சீன அமைச்சர் மரண விவகாரத்தில்...