×

ஓணத்தையொட்டி காந்தி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாழைத்தார் விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று, வாழைத்தார் வரத்து குறைவாக இருந்ததுடன், ஓணத்தையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் ஏலத்தின்போது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும். தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வாழைத்தார் கொண்டு வரப்பட்டு, அவை தரத்திற்கேற்றார்போல் குறிப்பிட்ட விலைக்கு எடை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை மழையால், வாழை அறுவடை பணி மந்தமானதுடன் மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரமாக வாழைத்தார் வரத்து குறைவானது. இருப்பினும், வெளியூர்களில் இருந்து ஓரளவு வழைத்தார் வரத்து இருந்துள்ளது. பின் இந்த மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கத்தால், சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை அதிகமானது.
இதில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, உள்ளூர் வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தாலும் தூத்துக்குடி, திருச்சி பகுதியிலிருந்து வாழைத்தார் வரத்து மிகவும் குறைவானது. இதனால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

நாளை மறுநாள் (29ம் தேதி) ஓணம் பண்டிகை என்பதால், அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விரைவாக விற்பனையானது. அதிலும், பெரும்பாலான வாழைத்தார்கள் கேரள மாநில பகுதிக்கே அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், விரைந்து வாழைத்தார்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த சிலவாரமாக ஒரு கிலோ ரூ.45-க்கு ஏலம்போன செவ்வாழைத்தார் நேற்று ரூ.56 வரையிலும், ரூ.38-க்கு விற்பனையான பூவந்தார் ரூ.42-க்கும், சாம்ராணி ரூ.45-க்கும், மோரீஸ் ரூ.42-க்கும், ரஸ்தாளி ரூ.48-க்கும், நேந்திரன் ஒருகிலோ ரூ.50-க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.45-க்கும் என, கூடுதல் விலைக்கு ஏலம் போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஓணத்தையொட்டி காந்தி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாழைத்தார் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Gandhi Market ,Pollachi ,Pollachi Market ,Dinakaran ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...