×

நெல், வாழை, கரும்புக்கு மாற்றாக சுக்காம்பார் கிராமத்தில் பிச்சிப்பூ சாகுபடி

*விவசாயி அசத்தல்

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் கிராமத்தில் நெல், வாழை, கரும்புக்கு மாற்றாக பிச்சிப்பூ சாகுபடி செய்து விவசாயி அசத்தி உள்ளார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது சுக்காம்பார் கிராமம். இந்த கிராமத்தில் விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே இந்த கிராமம் அமைந்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு ஏற்றதாக இந்த பகுதிகள் உள்ளன. இந்த விளைநிலங்களில் விவசாயிகள் நெல், வாழை, கரும்புக்கு மாற்றாக பிச்சிப்பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி சுரேஷ் என்பவர் கூறியதாவது:-நான் சிறு விவசாயி எனது ஊரில் அனைவரும் நெல், வாழை, கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஆனால் இந்த விவசாயத்திற்கு மாற்றாக பிச்சிப்பூ சாகுபடி செய்தால் நலமாக இருக்கும் என்று கருதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் பிச்சிப்பூ ஒரு கன்று விலை 6 ரூபாய்க்கு வாங்கி தனது வயலில் பதிக்கும் வரையில் ரூ.15 செலவு ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 2500 கன்றுகள் வாங்கி வந்து ஒரு தூருக்கு இரண்டு கன்றுகள் பதியம் வைத்து இரண்டு அடி நீளத்தில் பூக்கன்றுகள் பதிக்கப்பட்டுள்ளன.

இப்போது ஒரு வருடம் ஆகிறது. இந்த பிச்சிப்பூ சாகுபடிக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். இதற்கு பேக்டம்பாஸ் உரம் வைக்கப்பட்டு 50 முறை தண்ணீர் பாய்ச்சியுள்ளேன். பூச்செடிகளுக்கு இடையில் வளர்ந்துள்ள கலைகளை சிறு இயந்திரம் மூலம் களை எடுத்தும் வருகிறேன். இப்போது பிச்சிப்பூ பூத்து உள்ளது.

இந்த பூக்களை திருச்சி ரங்கம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ 200, 100, 50 ரூபாய்க்கு மார்க்கெட்டில் வாங்கிக்கொள்கின்றனர். இன்னும் நல்ல முறையில் பராமரித்து வந்தால் ஒரு சில வருடங்களில் நான் செலவு செய்த பணத்தை விட அதிக அளவில் இந்த பிச்சிப்பு மூலம் சம்பாதிக்க முடியும். இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.தற்போது பூ குறைவாக பூத்திருப்பதால் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை எடுக்கிறேன். அதிகளவில் பூக்கும் நேரத்தில் தினமும் பூ எடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்்.

The post நெல், வாழை, கரும்புக்கு மாற்றாக சுக்காம்பார் கிராமத்தில் பிச்சிப்பூ சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Sukkambar village ,Visaai ,Tirukkatupally ,Sukhambar ,Thirukkatupally ,Sukambar village ,
× RELATED திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி