×

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்கூட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பெண் சமையலர் காயம்

கடலூர்: பண்ரூட்டிஅருகே சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்கூட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் சத்துணவு பெண் சமையலர் சாந்தி காயமடைந்தார். நேற்று இரவு பெய்த மழை காரணமாக கட்டிடத்தின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டு சேதமாகி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சாந்தி சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

The post ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்கூட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பெண் சமையலர் காயம் appeared first on Dinakaran.

Tags : Panchayat union primary school kitchen ,accident ,Cuddalore ,Sannyasipet Panchayat Union Primary School ,Panruti ,Panchayat ,Union Primary School ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு...