×

திருப்பதி அலிபிரி நடைபாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தை சிக்கியது

திருப்பதி: திருப்பதி நடைபாதைக்கு வரும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் 4-வது சிறுத்தை சிக்கியது. இதுவரை நடைபாதையில் சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஒருவாரமாக முயற்சி செய்து வந்தனர். ஆபரேஷன் சிறுத்தை என்ற பெயரில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்றது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனப்பகுதிகளில் வசிக்கும் சிறுத்தைகள், திருப்பதி மலைக்கு பாதயாத்திரை ஆக நடந்து செல்லும் பக்தர்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பக்தர்கள் ஆகியோரை வெகுவாக அச்சுறுத்தி வருகின்றன. திருப்பதி மலையில் உள்ள அலிப்பிரி வழிநடைபாதை, வாகனங்கள் செல்லும் சாலை ஆகியவற்றில் ஐந்து இடங்களில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதை தேவஸ்தான நிர்வாகம் அடையாளம் கண்டது.

அலிப்பிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் மூன்று இடங்களிலும், காலிகோபுரத்தில் இருந்து ஏழாவது மைல் வரை உள்ள பகுதியில் ஒரு இடத்திலும் ,திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்ல பயன்படுத்தும் சாலையில் 38 வது வளைவு அருகே ஒரு இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் அடையாளம் கண்டது.

இந்நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். அந்த கூண்டுகளில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில், கடந்த 14ஆம் தேதி மற்றொரு பெண் சிறுத்தை சிக்கியது. இந்த நிலையில் ஆகஸ்ட் 17ம் தேதி மூன்றாவதாக சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருப்பதி நடைபாதைக்கு வரும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் 4-வது சிறுத்தை சிக்கியது. இதுவரை நடைபாதையில் சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஒருவாரமாக முயற்சி செய்து வந்தனர். ஆபரேஷன் சிறுத்தை என்ற பெயரில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post திருப்பதி அலிபிரி நடைபாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Tirupati Alipri ,Tirupati ,Tirupati Alibiri ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் விளையாட்டை...