×

அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்திலேயே 31,716 கார்களுக்கு முன்பதிவுகளை பெற்ற ‘கியா செல்டாஸ் பேஸ்லிப்ட்’

கியா செல்டாஸ் பேஸ்லிப்ட் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய ஒரு மாதத்திலேயே 31,716 கார்களுக்கு முன்பதிவுகள் செய்யப்பட்டு விட்டன. இந்த காரில் எச்டிஇ, எச்டிகே வரிசையில் 5 வேரியண்ட்கள், ஜிடி லைன், எக்ஸ் லைன் ஆகியவற்றில் தலா ஒரு வேரியண்ட் உள்ளன. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் தேர்வுகளில் கிடைக்கிறது. வேரியண்ட்களுக்கு ஏற்ப இன்ஜின்கள் வேறுபடும். இவை 115 எச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் முதல் 116 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வரை இன்ஜின்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தும். பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்த பிறகு இந்த கார்களுக்கு தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

எச்டிஎக்ஸ் டிரிம்களுக்கு கிராக்கிஇருப்பதாகவும், மொத்த முன்பதிவில் இவை 55 சதவீதம் உள்ளதாகவும் டீலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஜிடிஎக்ஸ் பிளஸ் மற்றும் எக்ஸ் லைன் வேரியண்ட்களுக்கு 3 மாதங்கள், எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட்களுக்கு 2 மாதங்கள் காத்திருப்பு காலம் உள்ளதாகவும், பவர் ஆலிவ் மற்றும் கருப்பு நிற கார்களுக்கு 3 மாத காத்திருப்பு காலம் உள்ளதாகவும், வெள்ளை மற்றும் சில்வர் நிறத்துக்கு காத்திருப்பு காலம் தேவையில்லை எனவும் டீலர்கள் கூறுகின்றனர்.

The post அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்திலேயே 31,716 கார்களுக்கு முன்பதிவுகளை பெற்ற ‘கியா செல்டாஸ் பேஸ்லிப்ட்’ appeared first on Dinakaran.

Tags : Kia ,Dinakaran ,
× RELATED பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும்...