×

ஹூண்டாய் வெனு நைட் எடிஷன்

ஹூண்டாய் நிறுவனம், வெனு நைட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 7 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக 1.2 லிட்டர் எஸ் (ஓ) நைட் மேனுவல் சுமார் ரூ.10 லட்சம் எனவும், டாப் வேரியண்ட்டான 1.0 லிட்டர் எஸ்எக்ஸ் (ஓ) நைட் டிசிடி டூயல் டோன் சுமார் ரூ.13.48 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ் (ஓ), எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் டூயல் டோன் மாடல்களில் 1.2 லிட்டர் இன்ஜினும், எஸ்எக்ஸ் (ஓ) வரிசையில் உள்ள 4 வேரியண்ட்களில் 1.0 லிட்டர் இன்ஜினும் இடம் பெற்றுள்ளது. ஏற்கெனவே உள்ள வெனு கார்களில் உள்ள இன்ஜின்தான். எனவே, தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றமும் இல்லை. அனைத்தும் பெட்ரோல் வேரியண்ட்கள்தான்.

அதேநேரத்தில் பெயருக்கு ஏற்ப முன்புற கிளில்கள், அலாய் வீல்கள், விங் மிரர், ஸ்கிட் பிளேட் ஆகியவை கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ் கேம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்பு கிரெட்டாவில் நைட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வெனுவில் நைட் எடிஷன் அறிமுகம் ஆகியுள்ளது. வெனு நைட் எடிஷன் காரானது, கியா சோனட், மகிந்திரா எக்ஸ்யுவி 300, டாடா நெக்சான் மற்றும் மாருதி சுசூகி பிரஸ்ஸா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஹூண்டாய் வெனு நைட் எடிஷன் appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Dinakaran ,
× RELATED ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா