×

ஓவரூர் கிராம மக்கள் நன்றி திருத்துறைப்பூண்டி பகுதியில் ரூ.8.67 கோடியில் சாலை பணிகள்

 

திருத்துறைப்பூண்டி, ஆக. 28: திருத்துறைப்பூண்டி பகுதியில் ரூ.8,67 கோடியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நகராட்சியில் பல்வேறு சாலை பணிகள், குளம் மேம்பாடு செய்யும் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கஜா புயலுக்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 128 சாலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இந்த சாலைகள் அமைப்பதற்காக அரசிடம் இருந்து ரூ.8 கோடியே 67 லட்சம் நிதி பெற்று பணிகள் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 28 சாலைகள் முடிந்துள்ளது. இந்நிலையில்10வது வார்டு அரியலூர் ரோடு பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது நடைபெற்று வரும் சாலை பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, பொதுபணி மேற்பார்வையாளர் ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் நகர்மன்ற உறுப்பினர் உமா இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஓவரூர் கிராம மக்கள் நன்றி திருத்துறைப்பூண்டி பகுதியில் ரூ.8.67 கோடியில் சாலை பணிகள் appeared first on Dinakaran.

Tags : Overur ,Tiruthurapoondi ,Thirutharapoondi ,City Council President ,Kavitha ,Thiruthaurapoondi ,
× RELATED திருவாரூர் மாவட்டம்...