×

பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

 

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 28: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா ரெட் கிராஸ் மூலமாக நடைபெற்றது. பள்ளிததலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் அ.பிச்சைமணி ஹென்றி டுனான்ட் படத்தை திறந்து வைத்து ஜெனிவா ஒப்பந்த நாள் சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ஒன்றிய அளவில் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரம்யா சத்தியநாதன் கல்லூரியின் தலைவர் சத்தியநாதன், முதல்வர் கே.குமரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். திருக்காட்டுப்பள்ளி லயன்ஸ் சங்கத்தினர், சானூரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நந்தகுமார், இளம் செஞ்சிலுவை சங்க ஒன்றிய அமைப்பாளர் ஜெயபாலன், தஞ்சாவூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ்மாறன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். துவக்கத்தில் ஒன்றிய அமைப்பாளர் சாஹேப் சாதிபேகம் வரவேற்றார். முடிவில் தஞ்சாவூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

The post பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Boys High School ,Boothalur ,Thirukkadupalli ,Geneva Convention Day Ceremony ,Thanjavur District ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம்