- புதுக்கோட்டை ஜெயில் மக்கள் நீதிமன்றம்
- புதுக்கோட்டை
- சிறைச்சாலை மக்கள் நீதிமன்றம்
- புதுக்கோட்டை மாவட்ட சிறை
- மக்கள் நீதிமன்றம்
- புதுக்கோட்டை ஜெயில்
புதுக்கோட்டை, ஆக.28: புதுக்கோட்டை மாவட்ட சிறையில் நடைபெற்ற சிறை மக்கள் நீதிமன்றத்தில் 31 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 6 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறை மக்கள் நீதிமன்றம் (ஜெயில் லோக் அதாலத்) நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ராஜேந்திரகண்ணன் தலைமையில், தலைமைக் குற்றவியல் நீதிபதி சசிகுமார், குற்றவியல் நடுவர் மன்ற எண்-1 நீதிபதி ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நீதிபதிகளும் கலந்து கொண்டு வழக்குகளை நடத்தினர். இதில், புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் மாவட்டத்திலுள்ள கிளைச் சிறைகளைச் சேர்ந்த சிறைவாசிகளின் 31 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. 6 சிறைவாசிகள் விடுவிக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
The post புதுக்கோட்டை சிறையில் மக்கள் நீதிமன்றம்: 6 சிறைவாசிகள் விடுவிப்பு appeared first on Dinakaran.
