×

ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

நாகப்பட்டினம்,ஆக.29: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பகுதிகளில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது. அந்த பேராலயத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்கள். இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இவ்வாறு புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை(29ம் தேதி) கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.

விழா நாட்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால் பக்தர்கள் நலன் கருதி முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் வேளாங்கண்ணி ஆர்ச் தொடங்கி கடற்கரை சாலை வரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்களில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Mother's Anniversary ,Witness ,Annual Festival ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழு...