×

ஒட்டன்சத்திரத்தில் சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்

ஒட்டன்சத்திரம், ஆக.28: ஒட்டன்சத்திரத்தில் தினகரன் செய்தி எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பொன்நகரம் பகுதியில் திருமண மண்டபம், பேக்கரி கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அதிகம் உள்ள பகுதிகளில், சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று எந்நேரமும் சாய்ந்து விழுந்து உயிர்பலி ஏற்படுத்தும் நிலையில் இருந்தது.

இதனை மாற்றக்கோரி கடந்த 22ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மின்கம்பம் உடனடியாக மாற்றப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையின்படி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் உடனடியாக மின்கம்பத்தை மாற்றிய மின்வாரிய அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் சேதமடைந்த மின்கம்பம் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : otensis ,Otansa ,Dinakaran ,1st Ward Ponnagar ,Otansatra Municipality ,Otensa ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...