
ஊட்டி, ஆக.28: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் போட்டி தேர்வு தொகுதி -1, தொகுதி – 2 ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஊட்டி, பிங்கர்போஸ்ட், கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.
இப்போட்டி தேர்விற்கான புத்தகங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஸ்மார்ட் போர்ட் வசதியுடன் கூடிய வகுப்பறையில் சிறந்த வல்லுநர்களை கொண்டு இலவச பாட குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்விற்கு தயாராகும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பட்டப்படிப்பை முடித்த தகுதியானவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 0423-2444004, 72000 19666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
The post டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.