×

தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு

 

சிவகங்கை, ஆக.28:மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குருசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் தட்கல் மின் இணைப்பு திட்டம் 2017 முதல் செயல்படுத்தப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் தட்கல் திட்டத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. எனவே தட்கல் முறையில் மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகள் மின் இணைப்பு பெற தங்கள் பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை(இயக்குதல் மற்றும பராமரித்தல்) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Superintending Engineer ,Distribution ,Guruswamy ,Tatkal ,Dinakaran ,
× RELATED பள்ளியில் எமிஸ் பதிவுகளில் இருந்து...