×

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு

 

தேவதானப்பட்டி, ஆக. 28: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். மஞ்சளாறு அணையில் இருந்து வடக்கு பக்கம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அணையின் மேல் பகுதி வழியாக தற்போது செல்கின்றனர். இது பொது வழித்தடம் போல் தற்போது பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும் மஞ்சளாறு அணை கிராமத்தில் இருந்து ஆற்றுக்கு வடக்கே செல்ல வேண்டும் என்றால் ஆற்றை கடந்து விளைநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. ஆற்றில் அதிக தண்ணீர் வரும் போது ஆற்றை கடக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் அணைக்கு கீழே கிராமத்தை ஒட்டி ஆற்றை கடக்க பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தற்போது மஞ்சளாறு அணைக்கு கீழே மஞ்சளாறு அணை கிராமத்திற்கு வடக்கே மஞ்சாறு ஆற்றின் குறுக்கே தேவதானப்பட்டி பேரூராட்சியின் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2.40 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விட்டால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் பொதுமக்கள் விளைநிலங்களுக்கு சென்று வர ஏதுவாக இருக்கும். இந்த பாலம் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி ராமையா, செயல்அலுவலர் விஜயா உடனிருந்தனர்.

The post தேவதானப்பட்டி அருகே மஞ்சளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Manchal River ,Devadanapatti ,Devdhanapatti ,Manchalaru dam ,Dinakaran ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை