×

ஆற்றில் குளித்த தூத்துக்குடி வாலிபர் மாயம்

 

அம்பை,ஆக.28: அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் குளித்த தூத்துக்குடியைச்சேர்ந்த வாலிபர் மாயமானார்.
தூத்துக்குடி விஸ்வபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சுரேஷ் (23), இவர் அங்குள்ள மோட்டார் ஒர்க்ஷாப்பில் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை ஒர்க்ஷாப்பில் பணிபுரியும் சக நண்பர்களுடன் அம்பைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு சின்னசங்கரன் கோவில் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷ் நீரில் மூழ்கி மாயமானார். உடனடியாக அவருடன் வந்தவர்கள் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து தீயணைப்புத்துறை மீட்புப்படை நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் தேடினர். நேற்று காலை 11மணி முதல் மாலை 7மணி வரை சுமார் 8மணி நேரம் தேடியும் சுரேஷ் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தீயணைப்புப்படையினர் தேடும் பணியை கைவிட்டு மீண்டும் இன்று காலை வந்து தேடுவதாக தெரிவித்தனர்.

The post ஆற்றில் குளித்த தூத்துக்குடி வாலிபர் மாயம் appeared first on Dinakaran.

Tags : mayam ,Ambai ,Thoothukudi ,Tamiraparani river ,Ambasamutram ,Balamurugan ,Suresh ,Tuticorin Vishwapuram ,
× RELATED அம்பை, விகேபுரம் வீதிகளில் இருந்து...