×

துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா

 

ஊத்தங்கரை, ஆக.28: ஊத்தங்கரையை அடுத்த, கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, டிஎன்எஸ்எப்., மாவட்டத் தலைவர் சர்ஜான் தலைமை வகித்தார். கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு விஞ்ஞானி டாக்டர் ஐயப்பன் கலந்து கொண்டு பேசினார். கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழாவில், மாவட்டம் முழுவதும் நடைபெற்ற, துளிர் திறன் அறிதல் தேர்வில், 500 மாணவர்கள், 100 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எளிய அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி கோளரங்கம், தாவரவியல் கண்காட்சி, பொம்மலாட்டம் போன்ற நிகழ்வுகளை மாணவர்களுக்கு நிகழ்த்திக் காட்டினர். மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Thulur Children's Science Festival ,Uthangarai ,Kerikepally Panchayat Union Primary School ,Tamil Nadu ,Science ,Movement ,Budding Children's Science Festival ,Dinakaran ,
× RELATED கோயில் சிலைகளை திருடிய முதியவர்...