×

18.50 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்

 

கிருஷ்ணகிரி, ஆக.28: கிருஷ்ணகிரி ஒன்றியம் பி.ஜி.புதூர் கிராமத்தில் ₹18.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை செல்லக்குமார் எம்பி., திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி ஒன்றியம், கல்லுக்குறிக்கி பஞ்சாயத்துக்குட்பட்ட பி.ஜி.புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப்பள்ளிக்கு, எம்பி டாக்டர் செல்லக்குமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹18.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, இரண்டு வகுப்பறைகளைக் கட்டித் கொடுத்தார். இந்த கட்டிடத்தை செல்லக்குமார் எம்பி., திறந்து வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர், முதியோர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், தையல் பயிற்சி முடித்த ஏழைப் பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சில் ஜேசு, வட்டாரக் கல்வி அலுவலர் நாராயணசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஷாபுதீன், நகர தலைவர் முபாரக், சேவாதள மாவட்டத் தலைவர் தேவராஜ், முன்னாள் தலைவர் ஆறுமுகம், பாண்டுரங்கன், ஆசிரியர் சாலியா, சையத் அப்சர், முகமது ஷாபி, சையத் மன்சூர், அப்துல் கலீல், இலியாஸ், சையத், உஸ்மான், ரிஸ்வான் பாஷா, சையத் நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 18.50 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri Union ,BG Putur ,Chellakumar… ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்