
திருச்சுழி, ஆக.28: திருச்சுழி அருகே பூலாங்கல்லில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பழைய மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மூலம் செயல்படும் கிராம பொதுநல கமிட்டியிடம் பள்ளிக்கு அடிப்படை தேவையை குறித்து அணுகியுள்ளனர். இதன் விளைவாக கிராம பொதுநல கமிட்டி மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மின் விசிறிகள் மற்றும் மின்சார விளக்குகள் அரசுப் பள்ளிக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு ஜமாத்தினுடைய செயலாளர் தீன்முகமது தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். சாகுல் ஹமீது, காதர் மீரான், முகமது ஜான், காஜா மைதீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னாள் மாணவர்கள், கிராம பொது நலக் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் அலி அகமது செய்யது மற்றும் இப்ராஹிம் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குணசேகரன் கலந்து கொண்டார். மேனாள் தலைமை ஆசிரியர் அனுமந்த பெருமாள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post கிராம பொதுநல கமிட்டி சார்பில் அரசுப்பள்ளிக்கு அடிப்படை வசதி appeared first on Dinakaran.