×

மாமல்லபுரம் அருகே ரேஸ் கார் மோதி பசுமாடு பலி

 

மாமல்லபுரம், ஆக 28: மாமல்லபுரம் அருகே அதிவேகமாக சென்ற ரேஸ் கார் மோதி பசுமாடு சம்பவ இடத்திலேயே பலியானது. காரை ஓட்டி வந்தவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மாமல்லபுரத்தில் இருந்து நேற்று காலை ரேஸ் கார் ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி பயங்கர சத்தத்துடனும், அதிவேகமாகவும் சென்று கொண்டிருந்தது. கார் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலைக்கு அருகே சென்றபோது, திடீரென ஒரு பசுமாடு குறுக்கிட்டது. அப்போது, காரை திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயன்றதால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பசுமாடு மீது பயங்கரமாக மோதியது.

இதில் 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சாலை தடுப்பில் மோதி மாடு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பசுமாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதில் காரை ஓட்டி வந்தவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் சென்னையைச் சேர்ந்த ஒரு விஐபியின் கார் என கூறப்படுகிறது. மேலும், ரேஸ் கார் மோதி பலியான பசுமாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடம் ஏற்கனவே நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்துக்குள்ளான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரம் அருகே ரேஸ் கார் மோதி பசுமாடு பலி appeared first on Dinakaran.

Tags : Pasumadu ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...