
- மேற்கு பட்டாசு
- கொல்கத்தா
- நீலகஞ்ச் போஷ்பால்
- தட்டாபுகூர்
- மேற்கு மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம்
- மேற்கு
- தின மலர்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் துத்தாபுகூரின் நில்கஞ்ச் போஷ்பலில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று அதிகாலை நேரிட்ட வெடிவிபத்தில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் பலியாகினர். இந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.இந்த விபத்து குறித்து பாஜ மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது, “திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கம் வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாகவும் மாறி விட்டது. பட்டாசு ஆலை விபத்து குறித்து தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தினால் மட்டுமே விபத்துக்கான உண்மையான காரணங்கள் வௌிவரும்” என்று தெரிவித்தார்.
The post மேற்குவங்க பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 பேர் பலி appeared first on Dinakaran.