×

விருதுநகர் எஸ்பிக்கு ரூ.10,000 அபராதம்

மதுரை: விருதுநகர் மாவட்டம், வெம்பகோட்டையைச் சேர்ந்த சுமதி, ஐகோர்ட் மதுரை கிளையில் 2016ல் தாக்கல் செய்த மனு: என் கணவர் காவல்துறையில் தலைமை காவலராக பணி புரிந்தார். பணியில் போதையில் இருந்ததாக கூறி அவரை, கடந்த 2002ல் பணி நீக்கம் செய்தனர். மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி தொடர்ந்து மனு அளித்து வந்தார். ஆனால், எந்தப் பலனும் ஏற்படாத நிலையில் கடந்த 2009ல் உயிரிழந்தார். என் கணவருக்கு கிடைக்க வேண்டிய கருணைத்தொகையை வழங்க 2016ல் உத்தரவிடப்பட்டது. ஆனால், எனது மனு நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து, கருணைத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டுதேவானந்த், இதில் கடந்த 7 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தற்போது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, அவகாசம் கோரிய மனு ஏற்கப்படுகிறது. இதற்காக விருதுநகர் எஸ்பிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை விருதுநகர் எஸ்பி, தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சேமநல நிதிக்கு ஒரு வாரத்தில் வழங்கி அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அபராத பணத்தை, பதில் மனு தாக்கல் செய்ய தாமதப்படுத்திய எஸ்பியிடமிருந்து (பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றாலும்) பெற வேண்டும் எனக் கூறி விசாரணையை செப். 9க்கு தள்ளி வைத்தார்.

The post விருதுநகர் எஸ்பிக்கு ரூ.10,000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar SP ,Madurai ,Sumathi ,Vembakotta, Virudhunagar district ,ICourt ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி