×

ஒன்றிய அரசுக்கு வைகோ எச்சரிக்கை கூடங்குளம் அணு உலைகளால் தென் தமிழ்நாடு அழியும்

சென்னை: ‘‘தென்தமிழ்நாட்டை காப்பாற்ற, கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும். இல்லையெனில் தென் தமிழ்நாடு அழிவை சந்திக்கும்’’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ஜப்பானில் அணுஉலைக் கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து, ஜப்பானியர்கள் அணுஉலையை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இதே போன்று கூடங்குளம் அணுஉலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற அணுஉலைக் கழிவு நீரை வங்காள விரிகுடாவில்தான் திறந்துவிடுவார்கள். இடிந்தகரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிந்துபோகும். நம் தலைமீது பேராபத்து கத்திபோல் தொங்குகிறது.

கூடங்குளத்தில் அணு உலைகளை மூடுவது ஒன்றுதான் எதிர்காலத்தில் தென்தமிழகத்தை பாதுகாக்கும் என்பதை எண்ணி அரசுக்குச் சொல்வதோடு, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன். நிலவில் கால் வைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதி பூமியே அழிந்துபோகும் என்பதை கவனப்படுத்துகிறேன். ஒன்றரை ஆண்டு காலம் இடிந்தகரை மக்கள் போராடினர். அரசுகள் கண்டுகொள்ளவில்லை. போராடியவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. என்மீதும் கூட ஒரு வழக்கு இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. கூடங்குளம் அணுஉலைகளால் தமிழ்நாட்டின் தென்பகுதி அழிவுக்கு ஆளாகும் என மீண்டும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசுக்கு வைகோ எச்சரிக்கை கூடங்குளம் அணு உலைகளால் தென் தமிழ்நாடு அழியும் appeared first on Dinakaran.

Tags : South ,Tamil Nadu ,Kudankulam ,Vaiko ,Union Government ,CHENNAI ,Thandamilnath ,South Tamil Nadu ,MDMK ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27...