×

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து

டெல்லி: உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் 4×400மீ தொடர் ஓட்டப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். ஓட்டப் போட்டியில் முகமது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வாரியத்தோடி, மற்றும் தமிழ்நாட்டின் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் 4×400மீ தொடர் ஓட்டப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

முகமது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வாரியத்தோடி, மற்றும் தமிழ்நாட்டின் ராஜேஷ் ரமேஷ் ஆகியோரின் சிறப்பான செயலுக்கு என் பாராட்டுக்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பிரதமரின் வாழ்த்து; “உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நம்பமுடியாத குழுப்பணி! ஆடவருக்கான 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் அனஸ், அமோஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய ஆசிய சாதனையைப் படைத்தனர்.

இது இந்திய தடகளத்திற்கு உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பான ஒரு வெற்றிகரமான மறுபிரவேசமாக நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.

The post உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,World Athletic Championship ,Delhi ,World Athletic Championships ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்