×

காட்டுமன்னார்கோவில் அருகே வீடுகட்டுமான பணியின் போது தோண்ட தோண்ட கிடைத்த பழமைவாய்ந்த 9 சிலைகள் !!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உத்ராபதி என்பவர் புதிய வீடு கட்டுவதற்கு பள்ளம் தோண்டும் பணியினை கடந்த 5 நாட்களாக செய்து வந்தார்.இன்று காலை மீண்டும் பணியினை பணியாளர்கள் மேற்கொண்டபோது அப்போது சில அடி ஆழத்தில் சிலைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வீட்டின் உரிமையாளர் உத்திராபதி வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்ப இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், இந்து அறநிலையத் துறை அதிகாரி வேல்விழி, சேத்தியாத்தோப்பு சரக டிஎஸ்பி ரூபன் குமார் சம்பஇடத்திற்கு நேரில் வந்து மீண்டும் பள்ளத்தை தோண்டினர்.

அப்போது சிவன் பார்வதி, ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பீடத்துடன் கூடிய பஞ்ச மூர்த்திகள், இடம்புரி விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் கண்டெடுக்கபட்டது,இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அதிகாரிகள் அது ஐம்பொன் சிலையா உலோக சிலையா எனும் கோணத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக கடலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்ப இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர் அதனைதொடர்ந்து ஜெசிபி இயந்திரங்களை கொண்டு மேலும் தோண்டும் போது நடராஜர், சோமாஸ்கந்தர்,நடன சம்பந்தர், சன்டிகேஸ்வரர் 4 சிலைகளை பாத்திரமாக மீட்டனர்.

அதனையடுத்து மேலும் சிலைகள் இருக்கலாம் என அந்த இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிலைகள் ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என கடலூர் தொல்லியல் துறையினருக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.சோதனையில் உலோக திருமேனி பஞ்சமூத்தி சிலைகள் எனவும் விலை மதிக்க முடியாத பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொழ்மையான சிலை என்றும் தெரிவித்தனர்.அதனையடுத்து அவை அனைத்தும் போலிஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி குமராட்சி காவல் ஆய்வாளர் அமுதா தலைமையில் காவல்நிலையத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த சிலைகள் அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்க படும் என தெரிகிறது. மேலும் சிலைகள் கிடைத்த பகுதியில் ஏதாவது பழமைவாய்ந்த கோவில் இருந்துள்ளாதா என அறநிலையத் துறை தொல்லியல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

The post காட்டுமன்னார்கோவில் அருகே வீடுகட்டுமான பணியின் போது தோண்ட தோண்ட கிடைத்த பழமைவாய்ந்த 9 சிலைகள் !! appeared first on Dinakaran.

Tags : Kadumannargo ,Thirunarayur ,Kathumannargol, Cuddalore district ,Utrapathi ,Wildmanargo ,
× RELATED காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ...