×

அசாமில் பாஜ எம்பி வீட்டில் சிறுவன் மர்மச்சாவு

கவுகாத்தி: அசாம் மாநிலம் சில்சார் தொகுதி பாஜ எம்பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்பி.யின் வீட்டின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தனது மகன், மகளுடன் அந்த பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் 10 வயது மகன் நேற்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினான். உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் வீடியோ கேம் விளையாட அவனது தாய் மொபைல் போன் கொடுக்காததால் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post அசாமில் பாஜ எம்பி வீட்டில் சிறுவன் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : baja ,assam ,Silchar ,Rajdeep Rai ,Kachar District ,Marmachau ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...