×

சாக்கடையை சுத்தம் செய்த வார்டு உறுப்பினர்கள்

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் 9 மட்டுமே உள்ளது. ஆனால், தற்போது 2 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 7 இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், 11வது வார்டு உறுப்பினர் ஜோசப் தனது வார்டில் சுகாதார தூய்மை பணி பாதிப்பால் தானே துய்மைவு பணியை மேற்கொண்டார். சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்ட பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றினார்.

இது குறித்து 10வது வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் 11வது வார்டு உறுப்பினர் ஜோசப் ஆகியோர் கூறியதாவது: கரைப்புதூர் ஊராட்சியில் 9 துப்புரவு பணியாளர்கள் பணியிடம் உள்ளது. ஆனால், தற்ேபாது 2 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால், பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடிவதில்லை. சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகம் அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தோம்.

மேலும், சாக்கடை தூய்மை செய்யும் போது எடுக்கப்படும் கழிவுகள் சாக்கடை கால்வாய் அருகிலேயே போடப்படுகிறது. இதனை அகற்றப்படுவதில்லை. இதனால் இந்த கழிவுகள் மீண்டும் சாக்கடை கால்வாயிலேயே விழுகின்றன. இதனால், மீண்டும் அடைப்பு ஏற்பட்டு வருகின்றன. எனவே, கலெக்டர் உடனடியாக தலையிட்டு காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சாக்கடையை சுத்தம் செய்த வார்டு உறுப்பினர்கள் appeared first on Dinakaran.

Tags : Ward ,Palladam ,Solvatur Palladam ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...