×

தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று (27.08.2023) முதல் 02.09.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tharumapuri ,Krishnagiri ,Thiruvarur ,Weather Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Thanjai ,Thurumapuri ,Weather Center ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு