
- கடலூர்
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
- கடற்கரை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பான் வீதி கேளிக்கைத் திட்டம்
- கடற்கரை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கடலூர்: கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பான் ஸ்ட்ரீட் கேளிக்கை நிகழ்ச்சி முதன்முறையாக நடத்தப்பட்டது இதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை முதன் முறையாக கடலூர் மாவட்ட நிர்வாகம் நடத்தியது .
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்பி ராஜ் தொடங்கி வைத்தார் கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் எஸ் பி ராஜாராம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நடனம், பாடல், விளையாட்டு ,நாய் கண்காட்சி, அறிவுசார் திறன் வெளிப்படுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் மேம்படுத்தல் என பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் காலை 6:00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 9:00 மணிக்கு கடந்தும் திரண்டு இருந்த இளைஞர்கள் பொதுமக்களின் கோரிக்கை தொடர்ந்து 10 மணி வரை நடைபெற்று முடிவடைந்தது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் உறுதி மொழியை ஏற்றுனர். இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூர் மாணவ-மாணவியர்கள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம் என போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்ட நிகழ்ச்சி கடலூர் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
The post கடலூரில் முதன்முறையாக ஃபன் ஸ்ட்ரீட்; கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.