×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,423 கனஅடியாக சரிந்தது

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையிலிருந்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,583 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 6,266 கன அடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 54.42 அடியிலிருந்து 53.70 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 20.22 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,423 கனஅடியாக சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Salem Matour Dam ,Matur Dam ,Canadians ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...