×

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி, ஆக.27: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிற மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே இளைஞரணியினர் வெள்ளை சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (27ம் தேதி) கலைஞர் அறிவாலயத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இக்கூட்டத்தில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை கழக இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையுடன் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து ஒன்றிய, நகர. பகுதி. பேரூர், கிளை கழக செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள 100க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொள்ள உடனடியாக ஆவண செய்ய வேண்டுமென மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ தியாகராஜன்ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Trichy Artist Knowledge Today District Youth Team Activists Meeting ,Trichy ,Secretary of State ,District Dizhagam Youth Team Actioners Meeting ,Artist ,Knowledge ,Dinakaran ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...