×

காரைக்குடியில் கல்விக்கடன் முகாம்

காரைக்குடி, ஆக.27: காரைக்குடியில் கல்விக்கடன் முகாம் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதன்படி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் செப்டம்பர் 8ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

கல்வி கடன் பெற விரும்பும் மாணவ,மாணவிகள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். முகாம் நடக்கும் நாளன்று கல்லூரியிலிருந்து பெறப்பட்ட போனபைட் சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மார்க் சான்று, முதல் பட்டதாரி சான்று மற்றும் கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post காரைக்குடியில் கல்விக்கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி