ராஜபாளையம், ஆக. 27: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் ஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் வெங்கடேஷ்வரன் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம், தனி நபரின் சுய ஒழுக்கம் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும் என்று எடுத்துரைத்தார். இரண்டாமாண்டு இளங்கலை வரலாற்று மாணவி காவ்யா நன்றியுரை வழங்கினார். மாணவி கார்த்திகா நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.
The post போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.