×

டூவீலர் விபத்தில் முதியவர் காயம்

 

ஏழாயிரம்பண்ணை, ஆக. 27: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேலத் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (60) இவர் மடத்துப்பட்டி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு தண்ணீர் எடுப்பதற்காக மடத்துப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வெம்பக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டூவீலர் முத்துராஜ் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து முத்துராஜ் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வெம்பக்கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் முதியவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Muthuraj ,Vembakkottai Melet Street, Virudhunagar district ,Mathuppatti Road ,
× RELATED கன்னியாகுமரி அருகே விவசாயி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை