×

காசநோய் கண்டறியும் முகாம்

 

ராஜபாளையம், ஆக. 27: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த சித்தர்கள் சேவா அறக்கட்டளை சார்பில் இலவச காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாலியர் மகாசன சங்க தலைவர் கணேசன் தலைமை வகிக்க, அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். டாக்டர் ராமலட்சுமி நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தார்.

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் போத்திராஜ், மேற்பார்வையாளர் சங்கீதா, சுகாதார மேற்பார்வையாளர் பொற்கொடி கலந்து கொண்டனர். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே எடுத்தும், சளி மாதிரிகள் கொண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை மூலம் மருத்துவ உதவிகள் வீடு தேடி வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

The post காசநோய் கண்டறியும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Rajapalayam, Virudhunagar district ,Madurai ,TB ,
× RELATED ராஜபாளையத்தில் வரதட்சணை எதிர்ப்பு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்