×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரை: சீர்காழி வழியாக சென்றனர்

தரங்கம்பாடி,ஆக.27: மயிலாடுதுறை மாவட்டம். பொறையார் துனை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பொறையார் மின் பாதையில் பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொறையார் மின் பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான பொறையார், எருக்கட்டாஞ்சேரி, காத்தான்சாவடி, ஒழுகைமங்கலம், சந்திரபாடி ஆகிய இடங்களில் நாளை மறுநாள் (29ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்ற தகவலை செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

திருப்பட்டினத்தில் நடைபெறும் ரூ.1 கோடி மதிப்பில் சாலை பணிகள்: நாக.தியாகராஜன் எம்எல்ஏ ஆய்வு
காரைக்கால்,ஆக.27: காரைக்கால் மாவட்டம், நிரவி – திருபட்டினம் தொகுதிக்குட்பட்ட புதுத்தெருவில் ரூ.51 லட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சாளர வசதிகளுடன் கூடிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலவாஞ்சூர் ஆசாரி தெருவில் ரூ.55 லட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் நேற்று சென்று ஆய்வு செய்தார்.பின்னர் நடைபெறும் பணிகள் குறித்தும்,தார் சாலை தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பேசிய நாக தியாகராஜன் எம்.எல்.ஏ பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரை: சீர்காழி வழியாக சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Velankanni temple annual festival ,Tharangambadi ,Mayiladuthurai District ,Poraiyar ,Poraiyar Tunai ,Velankanni ,
× RELATED சீர்காழி நகரில் சாலையில்...