×

விழுப்புரம், கடலூரில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கீழ்வேளூர், ஆக.27: தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவும், நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள நாகை மாவட்டத்திற்கு கடந்த 24ம் தேதி இரவு வருகை தந்தார். அப்போது நாகை மாவட்ட எல்லையான நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் திருமருகல் வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக, நாகூர் நகர திமுக மற்றும் திட்டச்சேரி பேரூர் திமுக சார்பிலும், 25ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து திருக்குவளை செல்லும் வழியில் மேலப்பிடாகை கடைத்தெருவில் வேதாரண்யம் நகர திமுக, வேதாரண்யம் கிழக்கு, மேற்கு ஒன்றியம், கீழையூர் கிழக்கு ஒன்றியம், தலைஞாயிறு ஒன்றியம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு பேரூர் சார்பிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருக்குவளையில் கீழையூர் மேற்கு ஒன்றியம், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சார்பிலும், வேளாங்கண்ணியில் இருந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று முதல்வருக்கு புத்தூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை தெற்கு, வடக்கு ஒன்றியம், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம், கீழ்வேளூர் பேரூர் சார்பில், நாகை ஈ.ஜி.எஸ். பாலிடெக்கினிக் அருகே நாகை நகர சார்பிலும் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழநாடு மீன் வளாச்சிக் கழக தலைவருமான கவுதமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட அவைத் தலைவர் செல்வம், துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் கற்பகம், பொருளாளர் லோகநாதன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வேதரத்தினம், காமராஜ், மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தராசன், மேகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், சார்லஸ், கோசிகுமார், உமா, பன்னீர்செல்வம், திருக்குவளை பழனியப்பன், பாண்டியன், ஒன்றிய செயலளார்கள் மகாகுமார், தாமஸ்ஆல்வாஎடிசன், செங்குட்டுவன், சரவணன், மலர்வண்ணன், சதாசிவம், உதயம்முருகையன், பழனியப்பன், சிக்கல் ஆனந்த், நகர திமுக செயலளார்கள் புகழேந்தி, மாரிமுத்து, செந்தில்குமார், பேரூர் செயலளார்கள் அட்சயலிங்கம், மரியசார்லஸ், சுப்பிரமணியன், முகமதுசுல்தான் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post விழுப்புரம், கடலூரில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Viluppuram, Cuddalore ,G.K. ,Stalin ,Dudvelur ,Chief Minister ,Tamil Nadu ,B.C. ,Vilappuram ,Cuddalore ,
× RELATED திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு..!!