×

கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

 

விருதுநகர், ஆக. 27: விருதுநகர் அருகே உள்ள கட்டினார் பட்டியில் உள்ள கிணற்றில் சடலம் மிதப்பதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஓ. கோவில் பட்டியைச் சேர்ந்த ஆத்தியப்பன் (33)என தெரிய வந்தது. கை கால்களை கட்டிய நிலையில் உடலில் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

The post கிணற்றில் இருந்து சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Khattinar Patti ,Vachakkarapatti ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...