×

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம்

கரூர், ஆக. 27: கரூர் மாநகராட்சி வெங்கமேடு பகுதியில் மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது கிராமம் எனது சுத்தம் என்ற அடிப்படையில் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் கடந்த ஓராண்டாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அமராவதி ஆறு, இரட்டை வாய்க்கால் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரப் பணிகள், வடிகால் பராமரிப்பு பணி, சுகாதார வளாகம் சுத்தப்படுத்தும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி கரூர் மாநகராட்சி வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட பி.வி.வி.சி நகர் ஓட்ட பிள்ளையார் கோவில் அருகில் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமை மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சுகாதார அதிகாரி டாக்டர் லட்சிய வர்மா, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஸ்டீபன் பாபு, கரூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி., முகவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கழிவுகள், காலி மது பாட்டில்கள், தண்ணீர் காலி பாட்டில்கள் உள்பட பல்வேறு பிளாஸ்டிக் கழிவு பொருட்களை 2 டன் அளவிற்கு அப்புறபடுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.

The post கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Vengamedu ,Karur Corporation ,Karur ,Mayor ,Kavita Ganesan ,Dinakaran ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...