×

செயின்ட் பால்ஸ் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி

 

கோவை, ஆக.27: கோவை தடாகம் சாலையில் கே.என்.ஜி புதூர் பிரிவில் உள்ள செயின்ட் பால்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிமியோ சொல்யூஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் தீபா கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் ஜூலியான ஞானசெல்வி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் புதிதாக வருகை தந்துள்ள முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூக்களையும், இனிப்புகளையும் கொடுத்து வரவேற்றனர். இதில் கல்லூரி தாளாளர் ரம்யா கிறிஸ்டி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post செயின்ட் பால்ஸ் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : St. Paul's College for Women ,Coimbatore ,St. Paul's Women's Art ,St. Paul's College for Women's ,Dinakaran ,
× RELATED கோவை காரமடையில் கடும் பனிப்பொழிவு: ஜாதி முல்லை பூச்செடிகள் கருகின