×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.84.70 கோடியில் தார்சாலை பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு

 

தாம்பரம், ஆக.27: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.84.70 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள், உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றில், ரூ.84.70 கோடி மதிப்பீட்டில் 196.56 கிலோ மீட்டர் நீளத்தில் 1189 உட்புற சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், 11வது வார்டு, பாஸ்கரன் தெரு பகுதியில் நடைபெறும் தார்சாலை பணிகள், 2வது மண்டலம், 19வது வார்டு, அலமேலுமங்காபுரம் 1வது, 2வது பிரதானசாலைகள் மற்றும் 2வது குறுக்கு தெரு பகுதியில் நடைபெறும் தார்சாலை பணிகள், 3வது மண்டலம், 39வது வார்டு, பவனத்தியார் தெரு பகுதியில் நடைபெறும் தார்சாலை பணி மற்றும் கிழக்கு தாம்பரம், சேலையூர் பகுதியில் 65வது வார்டு, ஏபிஎன் நகர் 1வது தெரு, கற்பகம் நகர் பிரதான சாலை மற்றும் 1வது குறுக்குத் தெரு பகுதியில் நடைபெறும் தார்சாலை பணிகளை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.84.70 கோடியில் தார்சாலை பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tharsala ,Tambaram Municipal Corporation ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...