- சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை
- சங்கரன்கோவில்
- தென்காசி மாவட்ட சங்கரன்கோயில் அரசு மருத்துவமனை
- சங்கரன்கோயில் அரசு மருத்துவமனை
சங்கரன்கோவில், ஆக.27: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு அறுவை சிகிச்சைகள் குறித்து தலைமை குடிமை மருத்துவர் செந்தில் சேகர், மருத்துவர்கள் ஜப்சீர், செல்வ சரவணன், ஜெயபாஸ்கர், ராணிகுமார், அர்ச்சனா, பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கூறுகையில், ‘சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு, குடலிறக்கம், கடுமையான எலும்பு முறிவு, மார்பக புற்றுநோய் கட்டி அகற்றல், ஹீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தைராய்டு அறுவை சிகிச்சை என்பது மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக தைராய்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தைராய்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது முழு குணமடைந்து உள்ளனர். கடந்த மாதம் மட்டும் 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் பகுதி மக்கள் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். இன்னும் மூன்று வாரங்களில் சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. எனவே சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி கட்டணம் இல்லாமல் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்’ என்றனர்.
The post சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.
