
- விவேக் ராமசாமி சூசாகம்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
- டிரம்ப்
- வாஷிங்டன்
- ஐக்கிய மாநிலங்கள்
- குடியரசுக் கட்சி
- தின மலர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். உட்கட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறதோ அவர்களே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள். அதிபர் பதவியை தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை என்று சமீபத்தில் விவேக் ராமசாமி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் டிரம்புக்கு துணை அதிபராக இருப்பதற்கு மகிழ்ச்சியா என்ற கேள்வி ஒன்றுக்கு விவேக் ராமசாமி அளித்துள்ள பதிலில், ‘‘இது என்னை பற்றியது இல்லை. என்னை பற்றியதாக இருந்தால், நிச்சயமாக என் வயதில் இருக்கும் ஒருவருக்கு இது ஒரு சிறந்த பதவியாகும். இது நமது நாட்டை புதுப்பிப்பது பற்றியது. நமது இயக்கத்தின் தலைவராக, வெள்ளை மாளிகையில் இருந்து இதை செய்தால் மட்டுமே இந்த நாட்டை மீண்டும் ஒன்றிணைக்க முடியும்” என்றார். எனவே விவேக் ராமசாமி, குடியரசு கட்சியின் வேட்புமனுவில் வெற்றிபெறாவிட்டால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து போட்டியிடக்கூடும் என்று சூசகமாக தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
The post அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புடன் இணைந்து போட்டியிட தயார்: விவேக் ராமசாமி சூசகம் appeared first on Dinakaran.