×

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு ஜப்பானில் வீழ்ச்சியை நோக்கி மீன்கள் விலை: மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல்

இவாகி: புகுஷிமா அணுஉலையின் சுத்திரிகரிக்கப்பட்ட கழிவுநீர் பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டதைத் தொடர்ந்து, கதிரியக்க பாதிப்பு அச்சம் காரணமாக ஜப்பான் மீன்கள் விலை குறைவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு மின் நிலையம் கடந்த 2011ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சேதமடைந்தது. அப்போது அணுக்கசிவு ஏற்படுவதை தடுக்க, பல கோடி லிட்டர் கடல் நீர் பயன்படுத்தப்படுத்தி, அணு உலை குளிர்விக்கப்பட்டது. இந்த பயன்படுத்தப்பட்ட நீர் 1000க்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்டங்களாக சுத்திகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கழிவுநீரில் உள்ள அனைத்து கதிரியக்கங்களும் கரைந்திருக்கும் என்பதால் அதை சிறிது சிறிதாக கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்தது. இதற்கு சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளும், உள்நாட்டிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதை மீறி அணுஉலை கழிவுநீரை கடந்த இரு தினங்களுக்கு முன் பசிபிக் கடலில் திறந்து விட்டது. இதன் காரணமாக ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீனா உடனடியாக தடை விதித்தது. அணுஉலையின் சுத்திரிகரிக்கப்பட்ட கழிவுநீரில் கதிரியக்கம் இன்னும் மிச்சமிருக்கும் என்ற அச்சம் ஜப்பான் மக்களிடமும் இருந்து வருகிறது.

இதனால், கடலில் கழிவுநீர் கலப்புக்குப் பிறகு, புகுஷிமா டெய்ச்சி அணுமின் நிலையத்திற்கு அருகே உள்ள துறைமுகத்தில் நேற்று மீன் ஏலம் மந்தமாக நடந்தது. இந்த துறைமுகத்தின் மிகவும் பிரபலமான ஜோபன்-மோனோ மீனின் விலை 10 சதவீதம் சரிந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் அச்சம் காரணமாக அடுத்து வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் எனவும், இதனால் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாக ஜப்பான் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

The post புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு ஜப்பானில் வீழ்ச்சியை நோக்கி மீன்கள் விலை: மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் appeared first on Dinakaran.

Tags : Fukushima ,Japan ,Iwaki ,Pacific Ocean ,
× RELATED ஜப்பானின் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!