×

கார்த்தி சிதம்பரம் வௌிநாடு செல்ல அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வௌிநாடுகளுக்கு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏர்செல் மாக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவையும் விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அவர் வௌிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு செப்டம்பர் 18 முதல் 24 வரை பிரான்சின் செயின்ட் டிரோபஸ் நகரில் நடக்கவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் பணியாற்றும் தன் மகளை பார்க்க இங்கிலாந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து செப்டம்பர் 15 முதல் 27 வரை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எப்டிஆர் அல்லது வங்கி வரைவோலை மூலம் ரூ.1 கோடி பிணைய வைப்புத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் வௌிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

The post கார்த்தி சிதம்பரம் வௌிநாடு செல்ல அனுமதி appeared first on Dinakaran.

Tags : Karti Chidambaram ,Vaunadu ,New Delhi ,Congress ,Delhi ,Vauni Nadu ,Karthi Chidambaram ,Dinakaran ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...