
- ராஜஸ்தான் முதல்வர்
- அமித் ஷா
- ஜெய்ப்பூர்
- மத்திய உள்துறை அமைச்சர்
- கங்கபூர், ராஜஸ்தான்
- ராஜஸ்தான்
- முதல் அமைச்சர்
- தின மலர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காபூர் நகரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, ‘பாஜ தலைமையிலான ஒன்றிய அரசானது வேளாண் பட்ஜெட்டை 6 மடங்கு அதிகரித்துள்ளது. கூட்டுறவுக்காக தனி அமைச்சகத்தை தொடங்கியுள்ளது. முதல்வர் கெலாட் தற்போது சிவப்பு நிறத்துக்கு மிகவும் பயப்படுகிறார். ஏனென்றால் அந்த டைரியின் நிறம் சிவப்பு. ஆனால் அதில் கருப்பு ஆவணங்கள் அதில் மறைந்துள்ளது. ராஜஸ்தான் அரசின் ஊழல்கள் அதில் இடம்பெற்றுள்ளது. உங்களுக்கு அவமானமாக இருந்தால் நீங்கள் பதவி விலகுங்கள்’என்றார்.
The post சிவப்பு டைரி விவகாரம் ராஜஸ்தான் முதல்வர் பதவி விலக வேண்டும்: அமித் ஷா வலியுறுத்தல் appeared first on Dinakaran.