×

கிளீவ்லேண்டு டென்னிஸ் பைனலில் சாரா

கிளீவ்லேண்டு: அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் நடைபெறும் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட ஸ்பெயின் வீராங்கனை சாரா சொரிபஸ் தொர்மோ தகுதி பெற்றார். அரையிறுதியில் ஜெர்மனியின் டடியனா மரியா (36 வயது, 49வது ரேங்க்) உடன் மோதிய சாரா தொர்மோ (26 வயது, 48வது ரேங்க்) 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 53 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் ரஷ்யா வீராங்கனை இகடெரினா அலெக்சாண்ட்ரோவா (28வயது, 22வது ரேங்க்) 7-5, 6-2 என நேர் செட்களில் சீனாவின் லின் ஸூவை (29 வயது, 48வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடக்கும் இறுதிப் போட்டியில் இகடெரினா – சாரா மோதுகின்றனர்.

The post கிளீவ்லேண்டு டென்னிஸ் பைனலில் சாரா appeared first on Dinakaran.

Tags : Sarah ,Cleveland ,Sarah Soribes ,Cleveland, USA ,Cleveland tennis ,Dinakaran ,
× RELATED 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாரா